-
ஏசாயா 65:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள்.+
திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள்.+
22 ஒருவர் கட்டும் வீட்டில் இன்னொருவர் குடியிருக்க மாட்டார்.
ஒருவருடைய தோட்டத்தின் விளைச்சலை இன்னொருவர் சாப்பிட மாட்டார்.
ஏனென்றால், மரத்தின் ஆயுள் காலத்தைப் போல என் ஜனங்களின் ஆயுள் காலமும் இருக்கும்.+
நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள்.
-
-
மல்கியா 3:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 என்னுடைய ஆலயத்தில் எப்போதும் உணவு இருப்பதற்காக, நீங்கள் கொடுக்க வேண்டிய பத்திலொரு பாகம்* முழுவதையும் அங்குள்ள சேமிப்பு அறைக்குக் கொண்டுவாருங்கள்.+ அப்போது, நான் வானத்தின் கதவுகளைத் திறந்து அளவில்லாத* ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிகிறேனா* இல்லையா என்று தயவுசெய்து என்னைச் சோதித்துப் பாருங்கள்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
-