12 ஆனால், நீதிமான்கள் பேரீச்ச மரம் போலச் செழித்து வளருவார்கள்.
லீபனோனில் இருக்கிற தேவதாரு மரம் போல ஓங்கி வளருவார்கள்.+
13 அவர்கள் யெகோவாவின் வீட்டில் நடப்பட்டிருக்கிறார்கள்.
நம் கடவுளுடைய பிரகாரங்களில் செழித்து வளருகிறார்கள்.+
14 வயதான காலத்திலும் அவர்கள் திடமாக இருப்பார்கள்.+
துடிப்பாகவும் தெம்பாகவும் இருப்பார்கள்.+