5 உங்களுடைய முன்னோர்கள் சொந்தமாக்கிக்கொண்ட தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கொண்டுவந்து சேர்ப்பார். நீங்களும் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். அப்போது அவர் உங்களைச் சீரும் சிறப்புமாக வாழ வைப்பார். நீங்கள் உங்களுடைய முன்னோர்களைவிட ஏராளமாகப் பெருகுவீர்கள்.+