20 சேராகுவின் மகனாகிய ஆகான்,+ அழிக்க வேண்டிய பொருளைத் திருடி துரோகம் செய்தபோது என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியாதா? எல்லா இஸ்ரவேலர்கள்மேலும் கடவுளுக்குப் பயங்கர கோபம் வந்தது,+ இல்லையா? அவன் செய்த பாவத்துக்காக மற்றவர்களும் செத்துப்போகவில்லையா?’”+ என்றார்கள்.