-
எண்ணாகமம் 32:20-22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 அதற்கு மோசே அவர்களிடம், “போர் செய்வதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் யெகோவாவின் முன்னிலையில் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு,+ 21 யோர்தானைக் கடந்து போனால், யெகோவா தன்னுடைய எதிரிகளை விரட்டியடித்த பின்பு,+ 22 அதாவது யெகோவா அந்தத் தேசத்தை வீழ்த்திய பிறகு,+ நீங்கள் திரும்பி வரலாம்.+ அப்போது யெகோவாவுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் முன்னால் குற்றமற்றவர்களாக இருப்பீர்கள். யெகோவாவின் முன்னிலையில் இந்தத் தேசம் உங்களுக்குச் சொந்தமாகும்.+
-
-
யோசுவா 22:1-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 ரூபன் கோத்திரத்தாரையும் காத் கோத்திரத்தாரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் யோசுவா கூப்பிட்டு, 2 “யெகோவாவின் ஊழியராகிய மோசே சொன்ன எல்லாவற்றையும்+ நீங்கள் செய்திருக்கிறீர்கள். நான் கொடுத்த எல்லா கட்டளைகளையும் கேட்டு நடந்திருக்கிறீர்கள்.+ 3 இவ்வளவு காலமாக, உங்கள் சகோதரர்களை நீங்கள் கைவிடவில்லை.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்திருக்கிறீர்கள்.+ 4 உங்கள் சகோதரர்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள் கடவுளாகிய யெகோவா இப்போது அமைதி தந்திருக்கிறார்.+ அதனால், யோர்தானின் கிழக்கே யெகோவாவின் ஊழியராகிய மோசே தந்த தேசத்தில்+ இருக்கிற உங்கள் கூடாரங்களுக்கு இப்போது திரும்பிப் போங்கள்.
-