48 கடைசியாக, அபாரீம் மலைத்தொடர்களிலிருந்து புறப்பட்டு எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் முகாம்போட்டார்கள்.+ 49 யோர்தானை ஒட்டியுள்ள அந்த மோவாப் பாலைநிலத்தில், பெத்-யெசிமோத் பகுதியிலிருந்து ஆபேல்-சித்தீம்வரை+ அவர்கள் தங்கியிருந்தார்கள்.