-
உபாகமம் 13:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவு காண்கிறவனைக் கொன்றுபோட வேண்டும்.+ ஏனென்றால், எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சை மீறி நடப்பதற்கு அவன் உங்களைத் தூண்டினான். உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்ன வழியைவிட்டு விலகும்படி உங்களைத் தூண்டினான். அதனால், தீமையை உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+
-
-
உபாகமம் 17:2-5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற நகரங்களில், ஒரு ஆணோ பெண்ணோ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்து, அவருடைய ஒப்பந்தத்தை மீறி,+ 3 என் கட்டளைக்கு+ எதிராக மற்ற தெய்வங்களையோ சூரியனையோ சந்திரனையோ வானத்துப் படைகளையோ ஒருவேளை கும்பிடலாம்.+ 4 அதைப் பற்றி உங்களிடம் யாராவது சொன்னால் அல்லது உங்களுக்கே தெரியவந்தால், அதை நன்றாக விசாரிக்க வேண்டும். இந்த அருவருப்பான காரியம் இஸ்ரவேலில் நடந்தது உண்மை என்பது தெரியவந்தால்,+ 5 இந்தக் குற்றத்தைச் செய்த ஆணை அல்லது பெண்ணை நகரவாசலுக்குக் கொண்டுவர வேண்டும், பின்பு கல்லெறிந்து கொல்ல வேண்டும்.+
-