-
யோசுவா 17:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 யோசேப்பின் வம்சத்தார் யோசுவாவிடம், “யெகோவா இன்றுவரை எங்களை ஆசீர்வதித்திருக்கிறார். நாங்கள் நிறைய பேர் இருக்கிறோம்.+ அப்படியிருக்கும்போது, எங்களுக்கு ஏன் ஒரேவொரு பங்கை மட்டும் குலுக்கல் போட்டுக்+ கொடுத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். 15 அதற்கு யோசுவா அவர்களிடம், “நீங்கள் நிறைய பேர் இருப்பதாலும், எப்பிராயீம் மலைப்பகுதி+ இட நெருக்கடியாக இருப்பதாலும், பெரிசியர்களும்+ ரெப்பாயீமியர்களும்+ வாழ்கிற தேசங்களுக்குப் போய் அங்குள்ள காடுகளை வெட்டி அங்கே குடியேறுங்கள்” என்றார்.
-