18பின்பு இஸ்ரவேலர்கள் எல்லாரும் சீலோவில்+ ஒன்றுகூடி, அங்கே சந்திப்புக் கூடாரத்தை அமைத்தார்கள்.+ ஏனென்றால், அப்போது தேசம் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.+
3 பரலோகப் படைகளின் யெகோவாவை வணங்கி அவருக்குப் பலி செலுத்த எல்க்கானா வருஷா வருஷம் சீலோவுக்குப் போனார்.+ ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும்+ சீலோவில் யெகோவாவின் சன்னிதியில் குருமார்களாகச் சேவை செய்துவந்தார்கள்.+