உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 22:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 சூனியக்காரியை நீங்கள் உயிரோடு விட்டுவைக்கக் கூடாது.+

  • லேவியராகமம் 19:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 ஆவிகளோடு பேசுகிறவர்களிடம் நீங்கள் போகக் கூடாது.+ குறிசொல்கிறவர்களிடம் குறி கேட்டு, உங்களை அசுத்தமாக்கிவிடக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

  • லேவியராகமம் 20:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஆவிகளோடு பேசுகிறவர்களிடமும்+ குறிசொல்கிறவர்களிடமும்+ போவதன் மூலம் எனக்குத் துரோகம் செய்கிறவனை நான் ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன்.+

  • 1 சாமுவேல் 15:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 கீழ்ப்படியாமல் போவது+ பில்லிசூனியத்தில் ஈடுபடும் பாவத்துக்குச்+ சமம். அகங்காரத்தோடு* நடந்துகொள்வது மாயமந்திரம் செய்வதற்கும் சிலைகளை* வணங்குவதற்கும் சமம். யெகோவாவின் கட்டளையை+ நீ ஒதுக்கித்தள்ளிவிட்டாய், அதனால் ராஜாவாக இல்லாதபடி அவர் உன்னை ஒதுக்கித்தள்ளிவிட்டார்”+ என்று சொன்னார்.

  • 1 சாமுவேல் 28:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இதற்கு முன்பே சாமுவேல் இறந்துபோயிருந்தார். அவருக்காக இஸ்ரவேலர்கள் எல்லாரும் துக்கம் அனுசரித்து, அவருடைய ஊராகிய ராமாவில் அவரை அடக்கம் செய்திருந்தார்கள்.+ ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் சவுல் தேசத்திலிருந்து துரத்தியடித்திருந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்