5தாவீதுக்குப் பிறகு அவருடைய மகன் சாலொமோன் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற விஷயத்தை தீருவின்+ ராஜாவான ஈராம் கேள்விப்பட்டார். தாவீதின் வாழ்நாள் முழுவதும் ஈராம் அவருக்கு ஒரு நல்ல நண்பராக இருந்ததால்*+ சாலொமோனைச் சந்திக்க தன்னுடைய ஊழியர்களை அனுப்பினார்.
8 பின்பு அவர் சாலொமோனுக்குச் செய்தி அனுப்பினார். அதில், “உங்களுடைய செய்தி கிடைத்தது. உங்கள் விருப்பப்படியே எல்லாவற்றையும் செய்கிறேன், தேவதாரு மரங்களையும் ஆபால் மரங்களையும்+ வெட்டி அனுப்புகிறேன்.