41 யாக்கோபு தன்னுடைய அப்பாவிடமிருந்து ஆசீர்வாதத்தை வாங்கிக்கொண்டதால் அவன்மேல் ஏசா வெறுப்பை வளர்த்துக்கொண்டான்.+ “இன்னும் கொஞ்சக் காலத்தில் அப்பா செத்துப்போய்விடுவார்.+ அதன்பின் என் தம்பி யாக்கோபைத் தீர்த்துக்கட்டிவிடுவேன்” என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டே இருந்தான்.