-
1 நாளாகமம் 11:12-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அவருக்கு அடுத்த இடத்தில், அகோகியனான+ தோதோவின் மகன் எலெயாசார்+ இருந்தார். மூன்று மாவீரர்களில் அவரும் ஒருவர். 13 பெலிஸ்தியர்கள் போர் செய்வதற்காகத் திரண்டு வந்திருந்தபோது பாஸ்-தம்மீம்+ என்ற இடத்தில் தாவீதுடன் அவர் இருந்தார்; பெலிஸ்தியர்களைப் பார்த்ததும் வீரர்கள் தலைதெறிக்க ஓடிப்போய்விட்டார்கள். அங்கே இருந்த வயலில் பார்லி செழித்து வளர்ந்திருந்தது. 14 அவர் அந்த வயல் நடுவில் நின்று அதைப் பாதுகாத்தார். பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்திக்கொண்டே இருந்தார். அன்று அவர் மூலம் யெகோவா மாபெரும் வெற்றியைத் தந்தார்.+
-