உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 23:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவருக்கு அடுத்த இடத்தில், அகோகியின் பேரனும் தோதோவின்+ மகனுமான எலெயாசார்+ இருந்தார். ஒருசமயம், இஸ்ரவேலர்களோடு போர் செய்ய பெலிஸ்தியர்கள் வந்தார்கள். தாவீதுடன் இருந்த மாவீரர்கள் மூன்று பேரும் பெலிஸ்தியர்களுக்குச் சவால் விட்டார்கள். அவர்களில் இந்த எலெயாசாரும் ஒருவர். ஆனால், மற்ற இஸ்ரவேல் வீரர்கள் பின்வாங்கினார்கள். 10 அப்போது எலெயாசார் துணிந்துநின்று சண்டைபோட்டார், பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினார். கை ஓய்ந்துபோகும்வரை அவர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே இருந்தார். வாளைப் பிடித்துப் பிடித்து அவருடைய கையே விறைத்துப்போனது.+ அவர்களுக்கு யெகோவா அன்று மாபெரும் வெற்றியைத் தந்தார்.+ கொல்லப்பட்ட ஆட்களிடமிருந்து கொள்ளையடிப்பதற்காக எலெயாசாரின் பின்னால் வீரர்கள் போனார்கள்.

  • 2 சாமுவேல் 23:15-17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அப்போது தாவீது, “பெத்லகேம் நுழைவாசலில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீரைக் குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று ஏக்கத்தோடு சொன்னார். 16 உடனே அந்த மூன்று மாவீரர்களும் பெலிஸ்தியர்களோடு சண்டை போட்டுக்கொண்டே அவர்களுடைய முகாமுக்குள் நுழைந்து பெத்லகேம் நுழைவாசலில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்து, யெகோவாவுக்காகக் கீழே ஊற்றிவிட்டார்.+ 17 அப்போது தாவீது, “யெகோவாவே, இப்படிச் செய்வதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது! எனக்காக உயிரையே பணயம் வைத்துப் போன என் வீரர்களின் இரத்தத்தை நான் குடிக்க வேண்டுமா?”+ என்றார். இப்படி, அந்தத் தண்ணீரைக் குடிக்க மறுத்துவிட்டார். இவையே அந்த மூன்று மாவீரர்கள் செய்த செயல்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்