-
1 நாளாகமம் 16:39, 40பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
39 யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரம் கிபியோனிலுள்ள+ ஆராதனை மேட்டில் இருந்தது. அங்கே குருவாகிய சாதோக்கும்+ மற்ற குருமார்களும் சேவை செய்தார்கள். 40 தகன பலிக்கான பலிபீடத்தில் காலையும் மாலையும் தவறாமல் யெகோவாவுக்குத் தகன பலி கொடுத்தார்கள். இஸ்ரவேலுக்கு யெகோவா கொடுத்த திருச்சட்டத்தில் உள்ளபடியே எல்லாவற்றையும் செய்தார்கள்.+
-