-
1 ராஜாக்கள் 9:20-22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 மற்ற தேசத்து மக்களான எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களில் மீதியாக இருந்தவர்களின் வம்சத்தார், 21 அதாவது இஸ்ரவேலர்கள் அடியோடு அழிக்காமல் விட்டுவைத்திருந்த ஆட்களின் வம்சத்தார், தேசத்தில் இருந்தார்கள்; சாலொமோன் அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்.+ அவர்கள் இன்றுவரை அவருக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.+ 22 ஆனால், இஸ்ரவேலர்களில் யாரையும் அடிமையாக்கவில்லை.+ ஏனென்றால் அவர்கள் சாலொமோனுடைய போர்வீரர்களாக, ஊழியர்களாக, தலைவர்களாக, படை அதிகாரிகளாக, அவருடைய ரதவீரர்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.
-
-
2 நாளாகமம் 2:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 பின்பு, மற்ற தேசத்தைச் சேர்ந்த ஆண்கள் எத்தனை பேர் இஸ்ரவேலில் இருக்கிறார்கள் என்பதை சாலொமோன் கணக்கெடுத்தார்.+ இதற்கு முன்பு அவருடைய அப்பா தாவீது கணக்கெடுத்திருந்தார்.+ அவர்கள் மொத்தம் 1,53,600 பேர் இருந்தார்கள். 18 அவர்களில் 70,000 பேரைச் சுமை சுமக்கவும், 80,000 பேரை மலைகளில் கற்களை வெட்டிச் செதுக்கவும் நியமித்தார்.+ இவர்களை மேற்பார்வை செய்ய 3,600 பேரை நியமித்தார்.+
-
-
2 நாளாகமம் 8:7-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 மற்ற தேசத்து மக்களான+ ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களில் மீதியாக இருந்தவர்களின் வம்சத்தார், 8 அதாவது இஸ்ரவேலர்கள் அடியோடு அழிக்காமல் விட்டுவைத்திருந்த ஆட்களின் வம்சத்தார்,+ தேசத்தில் இருந்தார்கள்; சாலொமோன் அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார். அவர்கள் இன்றுவரை அவருக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.+ 9 ஆனால், இஸ்ரவேலர்களில் யாரையும் அடிமையாக்கி வேலை வாங்கவில்லை;+ ஏனென்றால், அவர்கள் சாலொமோனுடைய போர்வீரர்களாக, அவருடைய படை அதிகாரிகளுக்குத் தலைவர்களாக, அவருடைய ரதவீரர்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.+
-