-
உபாகமம் 17:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அவர் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்போது, லேவியர்களான குருமார்களிடம் உள்ள திருச்சட்ட புத்தகத்தை*+ பார்த்து தனக்காக ஒரு நகலை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
19 அதை அவர் எப்போதும் வைத்திருக்க வேண்டும். தன்னுடைய வாழ்நாளெல்லாம் அதை வாசிக்க வேண்டும்.+ அப்போதுதான், தன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வார், திருச்சட்டத்திலுள்ள எல்லா வார்த்தைகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பார்.+
-
-
1 ராஜாக்கள் 8:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே, உங்களுடைய ஊழியரான என் அப்பா தாவீதிடம், ‘நீ என் வழியில் நடந்ததுபோல் உன் வாரிசுகளும் எனக்குக் கீழ்ப்படிந்து என் வழியில் நடந்தால், இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய உனக்கு வாரிசு இல்லாமல் போவதில்லை’+ என்று நீங்கள் கொடுத்திருந்த வாக்கை இப்போது நிறைவேற்றுங்கள்.
-
-
1 நாளாகமம் 28:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 சாலொமோனே, என் மகனே, உன் அப்பாவின் கடவுளை நன்றாகத் தெரிந்துகொள், அவருக்கு முழு இதயத்தோடு+ சந்தோஷமாக* சேவை செய். யெகோவா எல்லாருடைய இதயத்தையும் ஆராய்ந்து பார்க்கிறார்.+ மனதில் இருக்கிற ஒவ்வொரு யோசனையையும் நோக்கத்தையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.+ நீ அவரைத் தேடினால், அவரைக் கண்டடைய உதவி செய்வார்.+ நீ அவரை விட்டுவிட்டால், அவரும் உன்னை நிரந்தரமாக ஒதுக்கிவிடுவார்.+
-