-
உபாகமம் 12:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகவும் தான் குடிகொள்வதற்காகவும் உங்கள் கோத்திரங்களின் நடுவில் எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த இடத்துக்குப் போய் அவரை வணங்க வேண்டும்.+ 6 உங்களுடைய தகன பலிகளையும்,+ மற்ற பலிகளையும், பத்திலொரு பாகங்களையும்,+ காணிக்கைகளையும்,+ நீங்கள் நேர்ந்துகொண்ட பலிகளையும், நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலிகளையும்,+ ஆடுமாடுகளின் முதல் குட்டிகளையும் அங்கேதான் கொண்டுவர வேண்டும்.+
-
-
1 ராஜாக்கள் 8:28, 29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 யெகோவாவே, என் கடவுளே, இந்த அடியேனின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேளுங்கள், கருணை காட்டச் சொல்லி நான் உங்களிடம் செய்யும் மன்றாட்டைக் கேளுங்கள், உதவி கேட்டு நான் கெஞ்சுவதைக் கேளுங்கள், இன்று உங்கள் முன்னால் இந்த அடியேன் செய்யும் ஜெபத்தைக் கேளுங்கள். 29 ‘என் பெயர் தாங்கிய இடம்’+ என்று இந்த ஆலயத்தைப் பற்றிச் சொன்னீர்களே. அதனால், இந்த இடத்தை நோக்கி உங்களுடைய ஊழியன் செய்கிற ஜெபத்தைக் கேட்பதற்காக இரவும் பகலும் உங்களுடைய கண்கள் இந்த ஆலயத்தின் மேல் இருக்கட்டும்.+
-