-
உபாகமம் 17:18-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அவர் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்போது, லேவியர்களான குருமார்களிடம் உள்ள திருச்சட்ட புத்தகத்தை*+ பார்த்து தனக்காக ஒரு நகலை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
19 அதை அவர் எப்போதும் வைத்திருக்க வேண்டும். தன்னுடைய வாழ்நாளெல்லாம் அதை வாசிக்க வேண்டும்.+ அப்போதுதான், தன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வார், திருச்சட்டத்திலுள்ள எல்லா வார்த்தைகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பார்.+ 20 அதோடு, தன் சகோதரர்களைவிட தன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொண்டு தலைக்கனத்தோடு* நடக்க மாட்டார். கடவுளுடைய கட்டளைகளை அச்சுப்பிசகாமல் கடைப்பிடிப்பார். அப்போது, அவரும் அவருடைய மகன்களும் இஸ்ரவேலில் ரொம்பக் காலத்துக்கு ஆட்சி செய்வார்கள்” என்றார்.
-