-
2 நாளாகமம் 11:1-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தவுடனே, போர்ப் பயிற்சி பெற்ற 1,80,000 வீரர்களை யூதா வம்சத்திலிருந்தும் பென்யமீன் வம்சத்திலிருந்தும்+ ஒன்றுதிரட்டினார். இஸ்ரவேலுடன் போர் செய்து அதை மறுபடியும் தன்னுடைய ஆட்சியின்கீழ் கொண்டுவருவதற்காக அப்படிச் செய்தார்.+ 2 அப்போது யெகோவா, தீர்க்கதரிசி* செமாயாவிடம்,+ 3 “யூதாவின் ராஜாவான சாலொமோனின் மகன் ரெகொபெயாமிடமும் யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் நீ போய், 4 ‘உங்கள் சகோதரர்களை எதிர்த்து நீங்கள் போர் செய்யக் கூடாது. அவரவர் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப் போய்விட வேண்டும். ஏனென்றால், நான்தான் இப்படி நடக்க வைத்தேன்’+ என்று யெகோவா சொல்வதாகச் சொல்” என்றார். அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமை எதிர்த்துப் போர் செய்யாமல் திரும்பிப் போனார்கள்.
-
-
2 நாளாகமம் 25:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 யூதா வீரர்கள் எல்லாரையும் அமத்சியா ஒன்றுகூட்டினார்; பின்பு, யூதாவிலும் பென்யமீனிலும் இருந்த வீரர்கள் எல்லாரையும் தந்தைவழிக் குடும்பம்வாரியாக நிற்க வைத்தார். ஆயிரம் பேருக்குத் தலைவர்கள், நூறு பேருக்குத் தலைவர்கள் ஆகியோரின் கீழ் அவர்களை நிற்க வைத்தார்.+ இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள ஆண்கள்+ எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து பதிவு செய்தார்; படையில் சேவை செய்ய பயிற்சி பெற்ற வீரர்கள் 3,00,000 பேர் இருந்தார்கள். பெரிய ஈட்டியும் பெரிய கேடயமும் பிடித்துக்கொண்டு போர் செய்வதில் அவர்கள் திறமைசாலிகளாக இருந்தார்கள்.
-