-
1 ராஜாக்கள் 10:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 சாலொமோன் ராஜா கலப்புத் தங்கத்தில் 200 பெரிய கேடயங்களைச் செய்தார்+ (ஒவ்வொரு கேடயத்தையும் செய்ய 600 சேக்கல்* தங்கம் பயன்படுத்தப்பட்டது).+ 17 அதோடு, கலப்புத் தங்கத்தில் 300 சிறிய கேடயங்களையும்* செய்தார். (இவை ஒவ்வொன்றையும் செய்ய மூன்று மினா* தங்கம் பயன்படுத்தப்பட்டது). பின்பு, ‘லீபனோன் வன மாளிகையில்’+ அவற்றை வைத்தார்.
-
-
2 நாளாகமம் 12:9-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 எகிப்தின் ராஜாவான சீஷாக் எருசலேம்மீது படையெடுத்து வந்தான்; யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பொக்கிஷங்களையும்+ அரண்மனையில் இருந்த பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டுபோனான். சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கக் கேடயங்கள் உட்பட எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனான்.+ 10 அதனால், ரெகொபெயாம் ராஜா அந்தத் தங்கக் கேடயங்களுக்குப் பதிலாக செம்புக் கேடயங்களைச் செய்து, அரண்மனை வாசலைக் காக்கிற காவலாளிகளின் தலைவர்களிடம் ஒப்படைத்தார். 11 யெகோவாவின் ஆலயத்துக்கு ராஜா போகும்போதெல்லாம் காவலாளிகள் அவற்றை எடுத்துக்கொண்டு அவருடன் போவார்கள். பின்பு, அவற்றைக் காவலாளிகளின் அறையில் திரும்பக் கொண்டுவந்து வைத்துவிடுவார்கள்.
-