உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 9:53, 54
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 53 அப்போது ஒரு பெண், மாவு அரைக்கிற கல்லின்* மேற்கல்லை எடுத்து அபிமெலேக்கின் தலைமேல் போட்டாள். அவனுடைய மண்டை உடைந்தது.+ 54 உடனே, அவன் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்த பணியாளனைக் கூப்பிட்டு, “உன் வாளை உருவி என்னைக் கொன்றுவிடு. அப்போதுதான், ‘இவன் ஒரு பெண்ணின் கையால் செத்தான்’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள்” என்றான். அதனால், அவனுடைய பணியாளன் அவனை வாளால் குத்தினான், அவன் செத்துப்போனான்.

  • 1 சாமுவேல் 31:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதனால், சவுல் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்தவனிடம், “உன் வாளை உருவி என்னைக் குத்திப்போடு. இல்லாவிட்டால், விருத்தசேதனம் செய்யாத அந்த ஆட்கள்+ வந்து என்னைக் குத்திக் கொடூரமாக* கொன்றுவிடுவார்கள்” என்றார். ஆனால், அவன் மிகவும் பயந்ததால் தன்னால் முடியாதென்று சொல்லிவிட்டான். அதனால், சவுல் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டார்.+

  • 2 சாமுவேல் 17:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 தன்னுடைய ஆலோசனைப்படி அப்சலோம் நடக்கவில்லை எனத் தெரிந்ததும், அகித்தோப்பேல் ஒரு கழுதைமேல் சேணம்* வைத்துத் தன்னுடைய சொந்த ஊருக்குப் போனான்.+ வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு,+ தூக்குப்போட்டுக்கொண்டு செத்தான்.+ பின்பு, அவனுடைய முன்னோர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்