உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 31:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதனால், சவுல் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்தவனிடம், “உன் வாளை உருவி என்னைக் குத்திப்போடு. இல்லாவிட்டால், விருத்தசேதனம் செய்யாத அந்த ஆட்கள்+ வந்து என்னைக் குத்திக் கொடூரமாக* கொன்றுவிடுவார்கள்” என்றார். ஆனால், அவன் மிகவும் பயந்ததால் தன்னால் முடியாதென்று சொல்லிவிட்டான். அதனால், சவுல் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டார்.+

  • 1 ராஜாக்கள் 16:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அந்த நகரத்தை அவர்கள் கைப்பற்றிய விஷயம் சிம்ரிக்குத் தெரிந்தவுடன், அரண்மனையில் இருந்த பாதுகாப்பான கோபுரத்துக்குள் நுழைந்தார். அதற்குத் தீ வைத்துவிட்டு, அந்தத் தீயில் தானும் செத்துப்போனார்.+

  • சங்கீதம் 5:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 கடவுளே, நீங்கள் அவர்களைக் குற்றவாளிகள் என்று அறிவிப்பீர்கள்.

      அவர்களுடைய சதித்திட்டங்களே அவர்களைப் படுகுழியில் தள்ளிவிடும்.+

      அவர்கள் உங்களுக்கு அடங்கி நடக்காமல் நிறைய குற்றங்கள் செய்திருக்கிறார்கள்.

      அதனால், அவர்களை விரட்டியடியுங்கள்.

  • சங்கீதம் 55:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 கடவுளே, பொல்லாதவர்களை நீங்கள் படுகுழியில் தள்ளுவீர்கள்.+

      கொலைகாரர்களும் மோசடிக்காரர்களும் தங்கள் வாழ்நாளில் பாதியைக்கூட தாண்ட மாட்டார்கள்.+

      ஆனால், நான் உங்களையே நம்பியிருப்பேன்.

  • மத்தேயு 27:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைப் பார்த்து மனம் வருந்தினான்; அதனால், முதன்மை குருமார்களிடமும் பெரியோர்களிடமும் அந்த 30 வெள்ளிக் காசுகளைத் திரும்பக் கொண்டுபோய்,+

  • மத்தேயு 27:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதனால், அவன் அந்த வெள்ளிக் காசுகளை ஆலயத்துக்குள் வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து போய்த் தூக்குப்போட்டுக்கொண்டான்.+

  • அப்போஸ்தலர் 1:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஆனால், அவன் செய்த அநீதிக்குக் கிடைத்த கூலியை+ வைத்து ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு தலைகுப்புற விழுந்ததால் அவனுடைய வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போனது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்