-
ஏசாயா 36:4-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 ரப்சாக்கே அவர்களிடம், “மன்னாதி மன்னரான அசீரிய ராஜா சொல்லி அனுப்பிய இந்தச் செய்தியைத் தயவுசெய்து எசேக்கியாவிடம் போய்ச் சொல்லுங்கள்: ‘என்ன தைரியத்தில் நீ இப்படியெல்லாம் செய்கிறாய்?+ 5 என்னோடு போர் செய்ய உனக்குச் சாமர்த்தியமும் பலமும் இருப்பதாகப் பிதற்றுகிறாயே. யாரை நம்பி என்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டாய்?+ 6 இதோ! எகிப்தைப்போய் நம்பிக்கொண்டிருக்கிறாயே. அது ஒடிந்துபோன நாணல். அதன்மேல் யாராவது கை ஊன்றினால், அது அவனுடைய கையைக் குத்திக் கிழித்துவிடும். எகிப்தின் ராஜாவான பார்வோனை நம்பியிருக்கிற எல்லாருக்கும் அதே கதிதான் ஏற்படும்.+ 7 “எங்கள் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று ஒருவேளை நீ சொல்லலாம். ஆனால், அவருடைய ஆராதனை மேடுகளையும் பலிபீடங்களையும்தான் நீ அழித்துவிட்டாயே!+ “எருசலேமில் உள்ள பலிபீடத்தின் முன்னால்தான் நீங்கள் மண்டிபோட வேண்டும்” என்று யூதாவிலும் எருசலேமிலும் இருப்பவர்களுக்குச் சொல்லியிருக்கிறாயே!’+ 8 இதோ, என் எஜமானாகிய அசீரிய ராஜா உனக்குச் சவால் விடுகிறார்,+ கேள்: நான் உனக்கு 2,000 குதிரைகளைத் தருகிறேன், அதில் சவாரி செய்வதற்காவது உன்னிடம் ஆட்கள் இருக்கிறார்களா பார்க்கலாம்! 9 ரதங்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் நீ எகிப்திடம் கையேந்தி நிற்கிறாயே, என் எஜமானுக்கு வேலை செய்கிற ஒரு சாதாரண ஆளுநரையாவது உன்னால் விரட்டியடிக்க முடியுமா? 10 யெகோவாவின் உத்தரவு இல்லாமலா நான் இந்த இடத்தை அழிக்க வந்திருக்கிறேன்? ‘இந்த நகரத்துக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அதை அழித்துப்போடு’ என்று யெகோவாதான் என்னிடம் சொன்னார்” என்றான்.
-