-
2 ராஜாக்கள் 21:19-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 ஆமோன்+ 22 வயதில் ராஜாவாகி, இரண்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் மெசுல்லேமேத். அவள் யோத்பாவைச் சேர்ந்த ஆரூத்சின் மகள். 20 ஆமோன் தன்னுடைய அப்பா மனாசேயைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார்.+ 21 தன்னுடைய அப்பா வழியிலேயே நடந்தார், தன்னுடைய அப்பா வழிபட்ட அருவருப்பான சிலைகளுக்கு முன்னால் மண்டிபோட்டு வழிபட்டுவந்தார்.+
-