-
1 ராஜாக்கள் 7:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 தூண்களின் உச்சியில் வைப்பதற்காக இரண்டு செம்புக் கும்பங்களை வார்த்தார். ஒவ்வொரு கும்பத்தின் உயரமும் ஐந்து முழம்.
-
-
எரேமியா 52:21-23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 ஒவ்வொரு தூணின் உயரமும் 18 முழம்.* ஒவ்வொரு தூணையும் அளவுநூல் கொண்டு அளந்தபோது அதன் சுற்றளவு 12 முழம் இருந்தது.+ அதன் தடிமன் நான்கு விரலளவு இருந்தது. உள்ளே வெற்றிடமாக இருந்தது. 22 அதன் மேலிருந்த கும்பம் செம்பினால் செய்யப்பட்டிருந்தது. ஒரு கும்பத்தின் உயரம் ஐந்து முழம்.+ கும்பத்தைச் சுற்றியிருந்த வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் செம்பினால் செய்யப்பட்டிருந்தன. மற்றொரு தூணும் இதேபோல் இருந்தது, மாதுளம்பழ வடிவங்களும் இதேபோல் இருந்தன. 23 கும்பத்தைச் சுற்றிலும் 96 மாதுளம்பழ வடிவங்கள் இருந்தன. மொத்தம், 100 மாதுளம்பழ வடிவங்கள் வலைப்பின்னலைச் சுற்றி இருந்தன.+
-