-
யோசுவா 21:20-26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 லேவியர்களான மற்ற கோகாத்தியர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து குலுக்கல் முறையில் நகரங்கள் கொடுக்கப்பட்டன. 21 கொலையாளிக்கு அடைக்கல நகரமாக+ இருந்த சீகேமும்+ எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள அதன் மேய்ச்சல் நிலங்களும், கேசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 22 கிப்சாயீமும் அதன் மேய்ச்சல் நிலங்களும், பெத்-ஓரோனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.
23 தாண் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: எல்தேக்கேயும் அதன் மேய்ச்சல் நிலங்களும், கிபெத்தோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும், 24 ஆயலோனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், காத்-ரிம்மோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.
25 மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருடைய பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: தானாக்கும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், காத்-ரிம்மோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், இரண்டு நகரங்கள் கொடுக்கப்பட்டன.
26 கோகாத்தியர்களில் மற்ற குடும்பங்களுக்கு 10 நகரங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
-