உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 14:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 சிம்சோன் தன்னுடைய அம்மா அப்பாவோடு திம்னாவுக்குப் புறப்பட்டுப் போனார். அங்கிருந்த திராட்சைத் தோட்டத்துக்கு அவர் போய்ச் சேர்ந்தபோது, ஒரு சிங்கம் கர்ஜித்தபடி அவருக்கு நேராகப் பாய்ந்து வந்தது. 6 அப்போது யெகோவாவின் சக்தியால் அவர் பலம் பெற்று,+ ஓர் ஆட்டுக்குட்டியை இரண்டாகக் கிழிப்பதுபோல் அந்தச் சிங்கத்தை வெறுங்கையால் இரண்டாகக் கிழித்தார். ஆனால், இதைப் பற்றித் தன் அம்மாவிடமோ அப்பாவிடமோ சொல்லவில்லை.

  • 1 சாமுவேல் 17:36, 37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 சிங்கம், கரடி இரண்டையுமே அடித்துக் கொன்றேன். விருத்தசேதனம் செய்யாத இந்தப் பெலிஸ்தியனுக்கும் அதே கதிதான் வரும்! உயிருள்ள கடவுளின் படையிடமே அவன் சவால்விட்டிருக்கிறானே!”+ என்றான். 37 அதோடு, “சிங்கத்தின் பிடியிலிருந்தும் கரடியின் பிடியிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய யெகோவாதான் இந்தப் பெலிஸ்தியனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்”+ என்றான். அதற்கு சவுல், “சரி, புறப்பட்டுப் போ, யெகோவா உன்னோடு இருப்பார்!” என்று சொன்னார்.

  • 2 சாமுவேல் 23:20-23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யோய்தாவின் மகன் பெனாயா+ அஞ்சாநெஞ்சம் உள்ளவர். கப்செயேலில்+ வீரச்செயல்கள் பலவற்றைச் செய்திருந்தார். மோவாபியனான அரியேலின் இரண்டு மகன்களைக் கொன்றுபோட்டார். ஒருநாள், பனி பெய்துகொண்டிருந்தபோது தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தைக் கொன்றுபோட்டார்.+ 21 அதோடு, மிக மிக உயரமாக இருந்த ஓர் எகிப்தியனையும் கொன்றுபோட்டார். அந்த எகிப்தியன் கையில் ஈட்டி இருந்தது. ஆனாலும், பெனாயா ஒரு கம்பை எடுத்துக்கொண்டு அவனை எதிர்த்துச் சண்டைபோடப் போனார். அவனுடைய கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அந்த ஈட்டியாலேயே அவனைக் குத்திக் கொன்றார். 22 இவையெல்லாம் யோய்தாவின் மகன் பெனாயாவின் செயல்கள். முதல் மூன்று மாவீரர்களைப் போலவே இவரும் புகழ் பெற்றிருந்தார். 23 மாவீரர்கள் 30 பேரைவிட இவர் தனிச்சிறப்பு பெற்றிருந்தார். ஆனால், முதல் மூன்று மாவீரர்களுக்கு இவர் சமமாக இல்லை. ஆனாலும், தாவீது இவரைத் தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவராக நியமித்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்