உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 6:3-8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஒரு குன்றின் மேலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து+ உண்மைக் கடவுளின் பெட்டியை எடுத்து ஒரு புதிய மாட்டுவண்டியில் ஏற்றினார்கள்.+ அபினதாபின் மகன்களான ஊசாவும் அகியோவும் அந்தப் புதிய மாட்டுவண்டிக்கு முன்னால் நடந்துபோனார்கள்.

      4 குன்றின் மேலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து உண்மைக் கடவுளின் பெட்டியைக் கொண்டுவந்தபோது, பெட்டிக்கு முன்னால் அகியோ நடந்து போய்க்கொண்டிருந்தான். 5 தாவீதும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் யெகோவாவுக்கு முன்னால் உற்சாகம் பொங்க கொண்டாடினார்கள். ஆபால் மரத்தில் செய்யப்பட்ட இசைக் கருவிகள், யாழ்கள், மற்ற நரம்பிசைக் கருவிகள்,+ கஞ்சிராக்கள்,+ ஜால்ராக்கள், தாள வாத்தியங்கள் ஆகியவற்றை இசைத்துக்கொண்டு வந்தார்கள்.+ 6 ஆனால் நாகோனின் களத்துமேட்டுக்கு அவர்கள் வந்தபோது, மாடுகள் தடுமாறியதால் உண்மைக் கடவுளின் பெட்டி கீழே விழப்போனது. உடனே ஊசா தன்னுடைய கையை நீட்டி அந்தப் பெட்டியைப் பிடித்தான்.+ 7 அதனால், ஊசாமீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. கடவுளுடைய சட்டத்தை மதிக்காமல்+ ஊசா இப்படி நடந்துகொண்டதால், அவனை அந்த இடத்திலேயே உண்மைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ உண்மைக் கடவுளின் பெட்டிக்குப் பக்கத்திலேயே ஊசா விழுந்து செத்தான். 8 யெகோவா கடும் கோபத்தோடு ஊசாவைக் கொன்றுபோட்டதால் தாவீது கோபம்* அடைந்தார். அதனால், அந்த இடம் இன்றுவரை பேரேஸ்-ஊசா* என்று அழைக்கப்படுகிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்