-
2 சாமுவேல் 8:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 தாவீது ராஜா இவற்றை யெகோவாவுக்கு அர்ப்பணித்தார்.* அதோடு, தான் தோற்கடித்த எல்லா தேசங்களிலிருந்தும் கொண்டுவந்த தங்கம், வெள்ளி பொருள்களைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.+ 12 சீரியர்கள், மோவாபியர்கள்,+ அம்மோனியர்கள், பெலிஸ்தியர்கள்,+ அமலேக்கியர்கள்,+ சோபாவின் ராஜாவான ரேகோபின் மகன் ஆதாதேசர்+ ஆகியோரிடமிருந்து கைப்பற்றிய பொருள்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.
-
-
2 சாமுவேல் 12:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 பின்பு, அவர் மல்காம் தெய்வத்தின் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டார். அதன் எடை ஒரு தாலந்து* தங்கம். அதில் விலைமதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அதை தாவீதின் தலையில் வைத்தார்கள். அந்த நகரத்திலிருந்து ஏராளமான பொருள்களையும் அவர் கைப்பற்றினார்.+ 31 அங்கிருந்த மக்களை நகரத்துக்கு வெளியே கொண்டுவந்து அவர்களுக்குக் கல் அறுக்கும் வேலை கொடுத்தார். கூர்மையான இரும்புக் கருவிகளையும் இரும்புக் கோடாலிகளையும் பயன்படுத்தி வேலை செய்ய வைத்தார். செங்கல் செய்கிற வேலையையும் கொடுத்தார். அம்மோனியர்களுடைய நகரங்களில் இருந்த எல்லாரிடமும் இப்படியே வேலை வாங்கினார். கடைசியில், தன்னுடைய படை முழுவதையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்.
-