உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 3:1-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 எப்ரோனில் தாவீதுக்குப் பிறந்த மகன்கள்:+ மூத்த மகன் அம்னோன்;+ யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாம்+ இவனைப் பெற்றாள். இரண்டாம் மகன் தானியேல்; கர்மேலைச் சேர்ந்த அபிகாயில்+ இவனைப் பெற்றாள். 2 மூன்றாம் மகன் அப்சலோம்;+ கேசூர் ராஜாவான தல்மாயின் மகளாகிய மாக்காள் இவனைப் பெற்றாள். நான்காம் மகன் அதோனியா;+ ஆகீத் இவனைப் பெற்றாள். 3 ஐந்தாம் மகன் செப்பத்தியா; அபித்தாள் இவனைப் பெற்றாள். ஆறாம் மகன் இத்ரேயாம்; தாவீதின் மனைவி எக்லாள் இவனைப் பெற்றாள். 4 இந்த ஆறு மகன்களும் எப்ரோனில் அவருக்குப் பிறந்தவர்கள்; அங்கே அவர் ஏழு வருஷம் ஆறு மாதம் ஆட்சி செய்தார், 33 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+

      5 எருசலேமில் அவருக்குப் பிறந்த மகன்கள்:+ சிமேயா, சோபாப், நாத்தான்,+ சாலொமோன்;+ இவர்கள் நான்கு பேரையும் அம்மியேலின் மகளான பத்சேபாள்+ பெற்றாள். 6 அவருக்குப் பிறந்த மற்ற ஒன்பது மகன்கள்: இப்பார், எலிஷாமா, எலிப்பேலேத், 7 நோகா, நெப்பேக், யப்பியா, 8 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத். 9 இவர்கள் எல்லாரும் தாவீதின் மகன்கள்; இவர்களைத் தவிர மறுமனைவிகளின் மகன்களும் இருந்தார்கள். தாமார்+ இவர்களுடைய சகோதரி.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்