3 தன்னுடைய அப்பாவான எசேக்கியா அழித்துப்போட்ட ஆராதனை மேடுகளைத்+ திரும்பக் கட்டினார்; இஸ்ரவேலின் ராஜா ஆகாபைப் போலவே+ இவரும் பாகாலுக்குப் பலிபீடங்கள் கட்டி, பூஜைக் கம்பத்தை* நிறுத்தினார்.+ வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டு வணங்கி, அவற்றுக்குச் சேவை செய்தார்.+
28ஆகாஸ்+ ராஜாவானபோது அவருக்கு 20 வயது. அவர் எருசலேமில் 16 வருஷங்கள் ஆட்சி செய்தார். தன்னுடைய மூதாதையான தாவீது யெகோவாவுக்குப் பிரியமாக நடந்ததுபோல் அவர் நடக்கவில்லை.+
3 அதோடு, பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்* பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார், தன்னுடைய மகன்களை நெருப்பில் சுட்டெரித்தார்.+ இப்படி, இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்.+