-
2 ராஜாக்கள் 24:18-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 சிதேக்கியா ராஜாவானபோது அவருக்கு 21 வயது; அவர் எருசலேமில் 11 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அமுத்தாள்;+ அவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் மகள். 19 யோயாக்கீமைப் போலவே இவரும் யெகோவா வெறுக்கிற காரியங்களையே செய்துவந்தார்.+ 20 எருசலேமிலும் யூதாவிலும் இப்படிப்பட்ட காரியங்கள் நடந்து வந்ததால் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. கடைசியில், அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்தே ஒதுக்கித்தள்ளிவிட்டார்.+ பாபிலோன் ராஜாவுக்கு எதிராக சிதேக்கியா கலகம் செய்தார்.+
-
-
எரேமியா 52:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
52 சிதேக்கியா+ ராஜாவானபோது அவருக்கு 21 வயது. அவர் எருசலேமில் 11 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அமுத்தாள்.+ அவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் மகள். 2 யோயாக்கீமைப் போலவே சிதேக்கியாவும் யெகோவா வெறுக்கிற காரியங்களையே செய்துவந்தார்.+ 3 எருசலேமிலும் யூதாவிலும் இப்படிப்பட்ட காரியங்கள் நடந்து வந்ததால் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. கடைசியில் அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்தே ஒதுக்கித்தள்ளிவிட்டார்.+ பாபிலோன் ராஜாவுக்கு எதிராக சிதேக்கியா கலகம் செய்தார்.+
-