உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 23:36, 37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 யோயாக்கீம்+ 25 வயதில் ராஜாவாகி, 11 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் செபுதாள்; அவள் ரூமாவைச் சேர்ந்த பெதாயாவின் மகள். 37 யோயாக்கீம் தன்னுடைய முன்னோர்களைப் போலவே+ யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்துவந்தார்.+

  • எரேமியா 24:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 சாப்பிடவே முடியாதளவுக்கு மிகவும் கெட்டுப்போன அத்திப் பழங்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “யூதாவின் ராஜாவான சிதேக்கியாவும்,+ அவனுடைய அதிகாரிகளும், எருசலேமின் அழிவில் தப்பித்தவர்களும், அதாவது இந்தத் தேசத்திலும் எகிப்திலும்+ வாழ்கிறவர்களும், கெட்டுப்போன அத்திப் பழங்களைப் போல இருக்கிறார்கள்.

  • எரேமியா 37:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 யோசியாவின் மகனாகிய சிதேக்கியா,+ யோயாக்கீமின் மகனாகிய கோனியாவுக்கு*+ பதிலாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஏனென்றால், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் அவரை யூதாவின் ராஜாவாக நியமித்திருந்தான்.+ 2 ஆனால், சிதேக்கியாவும் அவருடைய ஊழியர்களும் அவருடைய ஜனங்களும் எரேமியா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்ன வார்த்தைகளைக் கேட்கவில்லை.

  • எரேமியா 38:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதற்கு ராஜா, “அவன் உங்கள் கையில் இருக்கிறான்! ராஜாவால் உங்களைத் தடுத்து நிறுத்தவா முடியும்?” என்று சொன்னார்.

      6 அதனால் அவர்கள் எரேமியாவைப் பிடித்து, ராஜாவின் மகனாகிய மல்கீயாவின் கிணற்றுக்குள் கயிறுகளினால் இறக்கினார்கள். அந்தக் கிணறு ‘காவலர் முற்றத்தில்’+ இருந்தது. அதில் தண்ணீரே இல்லை, வெறும் சேறுதான் இருந்தது. எரேமியா அதில் மூழ்க ஆரம்பித்தார்.

  • எசேக்கியேல் 21:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 இஸ்ரவேலின் பொல்லாத தலைவனே,+ படுகாயம் அடைந்தவனே, நீ இறுதி தண்டனையைப் பெறப்போகும் நாள் வந்துவிட்டது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்