-
2 ராஜாக்கள் 25:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 கல்தேய வீரர்கள் ராஜாவைப் பிடித்து,+ ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனார்கள். அங்கே அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 7 சிதேக்கியாவின் கண் முன்னாலேயே அவருடைய மகன்களைப் படுகொலை செய்தார்கள். பின்பு, நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+
-
-
எசேக்கியேல் 12:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அவர்களுடைய தலைவன் மூட்டைமுடிச்சுகளைத் தோளில் வைத்துக்கொண்டு இருட்டில் புறப்பட்டுப் போவான். சுவரில் ஓட்டை போட்டு அதன் வழியாகத் தன்னுடைய மூட்டைமுடிச்சுகளை எடுத்துக்கொண்டு போவான்.+ தரையைப் பார்க்க முடியாதபடி தன்னுடைய முகத்தை மூடிக்கொள்வான்’ என்று சொல். 13 நான் அவன்மேல் என் வலையை விரிப்பேன். அவன் அதில் சிக்கிக்கொள்வான்.+ நான் அவனை கல்தேயர்களின் தேசமாகிய பாபிலோனுக்கு அனுப்புவேன். ஆனால், அவன் அதைப் பார்க்க முடியாது. அங்கே அவன் செத்துப்போவான்.+
-