-
1 ராஜாக்கள் 3:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அதனால், நீ கேட்டபடியே ஞானமும் புரிந்துகொள்ளுதலும் உள்ள இதயத்தை உனக்குத் தருவேன்.+ உன்னைப் போல் ஞானமுள்ளவர் உனக்கு முன்பும் இருந்ததில்லை, உனக்குப் பின்பும் இருக்கப்போவதில்லை.+ 13 அதோடு, நீ கேட்காத செல்வத்தையும் புகழையும்கூட+ உனக்குத் தருவேன்.+ உன் காலத்தில் வேறெந்த ராஜாவும் உனக்குச் சமமாக இருக்க மாட்டார்.+
-
-
1 ராஜாக்கள் 10:23-25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 இப்படி, உலகத்திலிருந்த வேறெந்த ராஜாவையும்விட செல்வத்திலும்+ ஞானத்திலும் சாலொமோன் ராஜா தலைசிறந்தவராக இருந்தார்.+ 24 சாலொமோனைச் சந்தித்து, கடவுள் தந்த ஞானத்தால்+ அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்க உலகத்திலிருந்த எல்லா தேசத்து மக்களும் ஆசைப்பட்டார்கள். 25 அவரைச் சந்திக்க வந்த ஒவ்வொருவரும் தங்கப் பொருள்கள், வெள்ளிப் பொருள்கள், உடைகள், ஆயுதங்கள், பரிமளத் தைலம், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அன்பளிப்பாகக் கொண்டுவந்தார்கள். வருஷா வருஷம் இப்படிச் செய்துவந்தார்கள்.
-