-
2 ராஜாக்கள் 8:24-26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 யோராம் இறந்த* பின்பு, அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது ‘தாவீதின் நகரத்தில்,’ அடக்கம் செய்யப்பட்டார்.+ அடுத்ததாக, அவருடைய மகன் அகசியா+ ராஜாவானார்.
25 இஸ்ரவேலின் ராஜாவான ஆகாபின் மகன் யோராம் ஆட்சி செய்த 12-ஆம் வருஷத்தில், யூதாவின் ராஜாவான யோராமின் மகன் அகசியா ராஜாவானார்.+ 26 ராஜாவானபோது அவருக்கு 22 வயது. அவர் எருசலேமில் ஒரு வருஷம் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அத்தாலியாள்;+ இவள் இஸ்ரவேலின் ராஜாவான உம்ரியின்+ பேத்தி.
-