11 அங்கிருந்து அது வடக்கே இருக்கிற எக்ரோனின் சரிவுவரை போய்,+ சிக்ரோனிலிருந்து பாலா மலையைக் கடந்து, யாப்னியேலுக்குப் போய், கடலில் முடிவடைந்தது.
12 பெருங்கடலும் அதன் கரையோரப் பகுதிகளும் மேற்கு எல்லையாக இருந்தன.+ யூதா கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி நாலாபக்கமும் கிடைத்த எல்லை இதுதான்.