38 தகன பலிக்கான பலிபீடத்தை அவர் வேல மரத்தால் செய்தார். அது சதுரமாக இருந்தது. அதன் நீளம் ஐந்து முழமும், அகலம் ஐந்து முழமும், உயரம் மூன்று முழமுமாக இருந்தது.+ 2 அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள் வைத்தார். அந்தக் கொம்புகள் அதனுடன் இணைந்தபடி இருந்தன. பின்பு, அவர் அதற்குச் செம்பினால் தகடு அடித்தார்.+