-
2 ராஜாக்கள் 16:10-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அசீரிய ராஜாவான திகிலாத்-பிலேசரைச் சந்திக்க ஆகாஸ் ராஜா தமஸ்குவுக்குப் போனார். அங்கிருந்த பலிபீடத்தைப் பார்த்தபோது, அதன் வரைபடத்தைக் குருவாகிய ஊரியாவுக்கு அனுப்பி வைத்தார். அதன் வடிவமைப்பு, கட்டப்பட்ட விதம் போன்ற விவரங்களை அதில் குறிப்பிட்டிருந்தார்.+ 11 ஆகாஸ் ராஜா தமஸ்குவிலிருந்து அனுப்பிய எல்லா விவரங்களையும் வைத்து குருவாகிய ஊரியா+ ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.+ தமஸ்குவிலிருந்து ஆகாஸ் ராஜா திரும்பி வருவதற்குள் அந்தப் பலிபீடத்தைக் கட்டி முடித்துவிட்டார். 12 தமஸ்குவிலிருந்து ராஜா திரும்பி வந்து அந்தப் பலிபீடத்தைப் பார்த்தார், அதன் பக்கத்தில் போய் அதன்மேல் பலிகளைச் செலுத்தினார்.+ 13 அந்தப் பலிபீடத்தில் தன்னுடைய தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் எரித்துவந்தார். அதோடு, திராட்சமது காணிக்கைகளை ஊற்றி, சமாதான பலிகளின் இரத்தத்தை அதன்மேல் தெளித்தார்.
-