-
2 நாளாகமம் 15:10-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 ஆசா ஆட்சி செய்த 15-ஆம் வருஷம் மூன்றாம் மாதத்தில், அவர்கள் எல்லாரும் எருசலேமில் ஒன்றுகூடினார்கள். 11 எதிரிகளிடமிருந்து பிடித்துவந்த ஆடுமாடுகளில் 700 மாடுகளையும் 7,000 ஆடுகளையும் அவர்கள் அன்றைக்கு யெகோவாவுக்குப் பலி கொடுத்தார்கள். 12 அதோடு, முன்னோர்களின் கடவுளான யெகோவாவை முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் தேடுவோம் என்று சொல்லி ஒப்பந்தம் செய்தார்கள்;+ 13 பெரியவரோ சிறியவரோ, ஆணோ பெண்ணோ, இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைத் தேடாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தார்கள்.+
-