உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 23:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அம்ராமின் மகன்கள்: ஆரோன்,+ மோசே.+ மகா பரிசுத்த அறையைப் புனிதமாக வைத்திருக்கும் பொறுப்பு ஆரோனுக்கும் அவருடைய மகன்களுக்கும் நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது.+ அதோடு, யெகோவாவின் சன்னிதியில் பலிகளைச் செலுத்துவதும், அவருக்குச் சேவை செய்வதும், எப்போதும் கடவுளின் சார்பாக மக்களை ஆசீர்வதிப்பதும் இவர்களுடைய பொறுப்பாக இருந்தது.+

  • 1 நாளாகமம் 23:27-30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 தாவீது கடைசியாகக் கொடுத்த கட்டளைகளின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய லேவியர்கள் கணக்கெடுக்கப்பட்டார்கள். 28 யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்யும் ஆரோனின் வம்சத்தாருக்கு உதவி செய்ய வேண்டியது இவர்களுடைய பொறுப்பாக இருந்தது.+ பிரகாரங்களையும்+ சாப்பாட்டு அறைகளையும் கவனித்துக்கொள்வதற்கும், எல்லா புனிதப் பொருள்களையும் சுத்தப்படுத்துவதற்கும் ஆரோனின் வம்சத்தாருக்கு இவர்கள் உதவி செய்ய வேண்டும். அதோடு, உண்மைக் கடவுளின் ஆலயத்தில் செய்யப்படும் எல்லா வேலைகளிலும் அவர்களுக்குக் கூடமாட உதவி செய்ய வேண்டும். 29 படையல் ரொட்டிகளையும்+ உணவுக் காணிக்கையாகக் கொடுக்கப்படுகிற நைசான மாவையும், புளிப்பில்லாத மெல்லிய ரொட்டியையும்,+ வட்டக் கல்லில் செய்யப்படும் பணியாரங்களையும், எண்ணெய்விட்டுப் பிசைந்த மாவையும்+ தயாரிக்க அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதோடு, எல்லாவற்றின் அளவையும் எடையையும் கணக்கிட உதவி செய்ய வேண்டும். 30 தினமும் காலையும்+ மாலையும் அவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி அவரைப் புகழ்ந்துபாட வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்