-
2 ராஜாக்கள் 19:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அசீரிய ராஜா அனுப்பிய கடிதங்களைத் தூதுவர்களிடமிருந்து எசேக்கியா வாங்கிப் படித்தார். பின்பு, யெகோவாவின் ஆலயத்துக்குப் போய் அவற்றை* யெகோவாவின் முன்னால் விரித்து வைத்து,+ 15 யெகோவா முன்னால் இப்படி ஜெபம் செய்தார்:+ “யெகோவாவே, இஸ்ரவேலின் தேவனே, கேருபீன்களுக்கு மேலே* வீற்றிருப்பவரே,+ நீங்கள் ஒருவர்தான் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களுக்கும் கடவுள்.+ நீங்கள்தான் வானத்தையும் பூமியையும் படைத்த உண்மைக் கடவுள்.
-
-
2 நாளாகமம் 14:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அப்போது, ஆசா தன்னுடைய கடவுளான யெகோவாவிடம் மன்றாடினார்.+ “யெகோவாவே, நாங்கள் நிறைய பேரோ கொஞ்சப் பேரோ, எங்களுக்குச் சக்தி இருக்கிறதோ இல்லையோ, எப்படியிருந்தாலும் உங்களால் உதவி செய்ய முடியும்.+ அதனால் யெகோவா தேவனே, எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்,+ இந்தக் கூட்டத்தை எதிர்த்துப் போர் செய்ய உங்கள் பெயரில் வந்திருக்கிறோம்.+ யெகோவாவே, நீங்கள்தான் எங்களுடைய கடவுள். அற்ப மனிதன் உங்களை ஜெயிக்க விட்டுவிடாதீர்கள்”+ என்று கெஞ்சினார்.
-