17 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை நீங்கள் கொண்டாட வேண்டும்.+ ஏனென்றால், பெரிய படைபோல் இருக்கிற உங்களை அந்த நாளில்தான் எகிப்து தேசத்திலிருந்து நான் கூட்டிக்கொண்டு வருவேன். தலைமுறை தலைமுறையாக நீங்கள் அந்த நாளைக் கொண்டாட வேண்டும். என்றென்றுமே இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.