-
1 நாளாகமம் 9:22-27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 வழிபாட்டுக் கூடாரத்தின் வாயிற்காவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மொத்தம் 212 பேர். வம்சாவளிப் பட்டியலில் குறிப்பிட்டபடி, இவர்கள் தங்களுடைய பகுதிகளில் குடியிருந்தார்கள்.+ இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்ததால், தாவீதும் இறைவாக்கு சொல்பவரான+ சாமுவேலும் இவர்களை இந்த வேலையில் நியமித்திருந்தார்கள். 23 இவர்களும் இவர்களுடைய மகன்களும் யெகோவாவுடைய வீட்டின், அதாவது கூடாரத்தின், வாசலைக் காவல்காக்கும் வேலையை மேற்பார்வை செய்துவந்தார்கள்.+ 24 கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு பக்கமும் வாயிற்காவலர்கள் நின்றார்கள்.+ 25 இவர்களுடைய சகோதரர்கள் தங்களுடைய குடியிருப்புகளிலிருந்து அவ்வப்போது அங்கே வந்து ஏழு நாட்கள் இவர்களுடன் வேலை செய்தார்கள். 26 நம்பிக்கைக்குரிய நான்கு பேர் தலைமை வாயிற்காவலர்களாக இருந்தார்கள். உண்மைக் கடவுளின் வீட்டிலுள்ள சாப்பாட்டு அறைகளையும் பொக்கிஷ அறைகளையும் காவல்காக்கும் பொறுப்பு இந்த லேவியர்களுக்கு இருந்தது.+ 27 ராத்திரி முழுக்க உண்மைக் கடவுளின் வீட்டைச் சுற்றிலும் நின்று அவர்கள் காவல் காப்பார்கள்; ஏனென்றால், காவல்காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருந்தது, சாவியும் அவர்களிடம்தான் இருந்தது. அதனால், தினமும் காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.
-