-
எஸ்றா 7:14-16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 ராஜாவாகிய நானும் என்னுடைய ஏழு ஆலோசகர்களும் உன்னை அனுப்புகிறோம். உன் கையிலுள்ள உன் கடவுளுடைய திருச்சட்டத்தை யூதாவிலும் எருசலேமிலும் வாழ்கிறவர்கள் கடைப்பிடிக்கிறார்களா என்று நீ போய்ப் பார்க்க வேண்டும். 15 ராஜாவாகிய நானும் என் ஆலோசகர்களும் மனப்பூர்வமாகக் கொடுக்கிற வெள்ளியையும் தங்கத்தையும், எருசலேமில் குடிகொண்டுள்ள இஸ்ரவேலின் கடவுளுக்கு நீ எடுத்துக்கொண்டு போக வேண்டும். 16 அதோடு, உன் ஜனங்களும் குருமார்களும் எருசலேமிலுள்ள தங்கள் கடவுளின் ஆலயத்துக்காக மனப்பூர்வமாகத் தருகிற காணிக்கைகளையும், பாபிலோன் மாகாணம் முழுவதும் உனக்குக் கிடைக்கிற வெள்ளியையும் தங்கத்தையும் நீ எடுத்துக்கொண்டு போக வேண்டும்.+
-