-
எஸ்றா 1:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “பெர்சிய ராஜா கோரேஸ் அறிவிப்பது என்னவென்றால், ‘பரலோகத்தின் கடவுளாகிய யெகோவா இந்த உலகத்தில் இருக்கிற எல்லா தேசங்களையும் என் கையில் கொடுத்திருக்கிறார்.+ யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி என்னிடம் கட்டளையிட்டிருக்கிறார்.+ 3 அவருடைய ஜனங்களில் யாரெல்லாம் இங்கே இருக்கிறார்களோ அவர்களெல்லாம் யூதாவிலுள்ள எருசலேமுக்குப் போய், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்ட வேண்டும். அவர்களுடைய கடவுள் அவர்களோடு இருப்பாராக. அவர்தான் உண்மைக் கடவுள்; அவருடைய ஆலயம் எருசலேமில் இருந்தது.*
-
-
எஸ்றா 6:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 “கோரேஸ் ராஜா தனது ஆட்சியின் முதலாம் வருஷத்தில் எருசலேம் ஆலயம் சம்பந்தமாகக் கொடுத்த உத்தரவு இதுதான்:+ ‘ஆலயத்தை முன்பிருந்த இடத்தில் திரும்பக் கட்டி, அங்கு பலிகளைச் செலுத்த வேண்டும். அதன் அஸ்திவாரங்களைப் பழுதுபார்க்க வேண்டும். அதன் உயரம் 60 முழமாகவும்,* அகலம் 60 முழமாகவும் இருக்க வேண்டும்.+ 4 பெரிய கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக மூன்று வரிசைகளிலும், மரங்களை+ ஒரு வரிசையிலும் வைத்துக் கட்ட வேண்டும். அதற்கான செலவுகள் ராஜாவின் கஜானாவிலிருந்து தரப்படும்.+
-