3 அதற்கு அவர்கள், “கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போகப்படாமல் யூதா மாகாணத்தில் விடப்பட்ட ஜனங்கள் மோசமான நிலைமையில் இருக்கிறார்கள், ரொம்பவே அவமானப்பட்டுப் போயிருக்கிறார்கள்.+ எருசலேமின் மதில்கள் இடிந்து கிடக்கின்றன.+ அதன் நுழைவாசல்கள் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கின்றன”+ என்று சொன்னார்கள்.