21 ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த பொக்கிஷ அறை அதிகாரிகள் எல்லாருக்கும் அர்தசஷ்டா ராஜாவாகிய நான் உத்தரவிடுவது என்னவென்றால், பரலோகத்தின் கடவுளுடைய திருச்சட்டத்தை நகலெடுப்பவரும் குருவுமாகிய எஸ்றா+ கேட்கிற எல்லாவற்றையும் நீங்கள் உடனே கொடுக்க வேண்டும்.