-
ஆதியாகமம் 43:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அதற்கு அவர்களுடைய அப்பா இஸ்ரவேல், “அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள். இந்தத் தேசத்திலுள்ள சிறந்த பொருள்களை உங்களுடைய பைகளில் எடுத்துக்கொண்டுபோய் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுங்கள்.+ கொஞ்சம் பரிமளத் தைலத்தையும்,+ கொஞ்சம் தேனையும், மலைரோஜா பிசினையும், பிசின் பட்டையையும்,+ பாதாமையும், பிஸ்தாவையும் கொண்டுபோய்க் கொடுங்கள்.
-
-
2 ராஜாக்கள் 20:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அவர்களை எசேக்கியா வரவேற்று தன் பொக்கிஷ அறை முழுவதையும் காட்டினார்.+ தங்கம், வெள்ளி, பரிமளத் தைலம், விலைமதிப்புள்ள எண்ணெய் வகைகள் ஆகியவற்றையும் ஆயுதக்கிடங்கையும் தான் சேர்த்து வைத்திருந்த மற்ற எல்லாவற்றையும் காட்டினார். தன் அரண்மனையிலும் ராஜ்யத்திலும் இருந்த ஒன்றைக்கூட அவர் காட்டாமல் இருக்கவில்லை.
-